1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (21:33 IST)

பிரபல ஹீரோவுக்கு டஃப் கொடுக்கும் தந்தை .....வைரலாகும் பாடிபில்டிங் போட்டோ

தனுஷ் நடித்த மாரி - 2 படத்தின் இரண்டாம் பாகத்தில்,  தனுஷ் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி ஹீரோயினாக நடித்தார்.அவருடன்  மலையாள நடிகரான டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

மலையாளத்தில் பிரபல இளம் நடிகராக அறியப்படும் டொவினோ தாமஸ் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அவருக்கு ரசிகர் வட்டமும் அதிகம்.


இந்நிலையில் டொவினோ தாமஸ் தானே தயாரித்து நடித்துள்ள கிலோ மீட்டர் அண்ட் கிலோமீட்டர் படம் சில நாட்களுக்கு முன் வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில் டொவினோ தாமஸ் மற்றும் அவரது தந்தை இருவரும் உடற்பயிற்சிக் கூடத்தில் நின்று கொண்டிருப்பது போல் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

மகனுக்கு டஃப் கொடுப்பந்து போல் இந்த வயதிலும் அவரது தந்தை உடலை பிட்டாக வைத்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.