செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (14:09 IST)

லியோ படத்துக்கு வேற லெவல் டிரான்ஸ்பர்மேஷனுக்கு ஆளான சாண்டி மாஸ்டர்!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி மாஸ்டர். பிக்பாஸ் வீட்டுக்கு சென்று வந்தததற்கு பிறகு அவர் பிரபலமானார். இதையடுத்து இப்போது அவர் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் கிஃப்ட் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கும் அவர், அதற்கு முன்பாகவே லியோ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவரது வேடத்துக்காக அவர் சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அந்த தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை அவர் பகிர, அது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.