திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (15:50 IST)

இன்று மாலை அனிருத் வெளியிடும் அஞ்சலியின் லிசா டீசர்

அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடித்துள்ள  படம் 'லிசா'. இந்த படத்தை ‘PG மீடியா வொர்க்ஸ்' நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார்.
 
3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த ஹாரர் படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக்கியுள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் டிராக் & மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் லிசா படத்தின் டீசரை இன்று மாலை 5மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுகிறார்.