புதன், 5 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (17:12 IST)

அனிருத் ரிலீஸ் செய்த ’’ஆல்பம் பாடல்’’…இணையதளத்தில் வைரல்

விவேக் மெர்வின் இருவரின் இசையில் உருவாகியுள்ள தனிப்பாடலான பக்கம் நீயும் இல்லை என்ற பாடலை அனிருத் வெளியிட்டுள்ளார்.
 
விவேக் மெர்வின் இருவரும் ஆரம்பகாலக்கட்டங்களில் இசையமைத்து பாடல்களையும் இசையும்  தனிப்பாடல்களாகவும் ஆல்பமாகவும் வெளியிட்டுக்கொண்டிருந்த நிலையில் அனிருத்துடன் இணைந்து பணியாற்றி வந்தனர்.அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வர அதைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் இவர்கள் இசையில் வடகறி, டோரா, புகழ், பிரபுதேவாவின் குலேபகாவலி , தனுஷ் பட்டாசு , விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஒரு ஆல்பம் பாடல் தயாரித்துள்ளனர். இதற்குப் பக்கம் நீயுமில்லை என்று பெயர் வைத்துள்ளனர்.

இன்று மாலை 5 மணிக்கு சோனி மியூசிக் சவுத் என்ற டுவிட்டர் பக்கத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விபேக் மெர்லின் இசையில் கார்த்திக் எழுதிய உரசாத பாடல் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் இவர்கள்தான் இசையமைத்துள்ளனர்.