செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2021 (11:46 IST)

செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் !வைரல் புகைப்படம்

மராட்டிய மாநிலத்தில் ஒரு குடும்பமே இணைந்து நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் அனைவராலும் விரும்பி வளர்க்கப்படும் உயிரினம் மற்றும் செல்லப்பிராணி நாய். இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் உள்ள அகமத் நகரில் ஒரு குடும்பமே இணைந்து தங்கள் வீட்டில் வளர்க்கும் லூசி என்ற நாய்க்கு தடபுடலாக வளைகாப்பு நடத்தியுள்ளனர்.

செல்லப்பிராணியான நாய்க்கு வளைகாப்பு நடத்தியதற்கு அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் நாயை பாரம்பரியமன உடை அணிவித்து, ஒரு தொட்டிலில் அமரவைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.