திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (14:59 IST)

விஜய் சொல்லக்கூடாதுன்னு சொன்ன ரகசியத்தை போட்டு உடைத்த அனிருத்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்த படம் கத்தி இந்தப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து படத்தின் பிஜிஎம் இசையால் மிரளவிட்டார். மேலும் இப்படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.


 
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனிருத், அவர் பயன்படுத்தும் பியானோ குறித்து ஸ்வாரஸிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அது என்னவெனில், அந்த பியானோ நம்ம தளபதி  தான் கத்தி படத்திற்கு இசையமைத்ததற்காக பரிசாக அளித்தார் என்று கூறியுள்ளார். 


 
முதன்முதலாக தளபதி விஜய் படத்திற்கு இசையமைத்திருந்த அனிருத், இந்த படத்தில் அவர் போட்ட பிஜிஎம் படத்திற்கு மிகப்பெரிய  ஒரு மாஸை கொடுத்தால் விஜய் இந்த பரிசை அளித்தாராம். இந்த தகவலை இதுவரை அனிருத் எந்த ஒரு இடத்திலும் சொன்னதே இல்லை. ஒரு வேலை விஜய் சொல்லவேண்டாம் என சொல்லியும் இந்த ரகசியத்தை அனிருத் வாய் தவறி சொல்லிவிட்டாரோ என்னவோ...!