துல்கர் சல்மானை அடுத்து இந்த பிரபல ஹீரோவும் தக் லைஃப் படத்தில் இருந்து விலகுகிறாரா?
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பல படங்களில் நடித்து வரும் அவரால் தொடர்ச்சியாக இந்த படத்துக்காக தேதிகள் ஒதுக்க முடியாததால் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் நானி அல்லது சிம்பு இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலக உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் கொடுத்த தேதிகளில் மணிரத்னம் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க முடியவில்லையாம். ஏனென்றால் கமல்ஹாசன் தேர்தல் காரணமாக இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அவரால் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என சொல்லப்படுகிறது.