"திருமணம் ஆன நபருடன் தொடர்பு" ஆண்ட்ரியாவின் இருள் சூழ்ந்த வாழ்க்கை!

Last Updated: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (15:52 IST)
தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா  “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார். 


 
படங்களில் நடித்து வரும் சமயத்தில் சில உணர்வுபூர்வமான பாடல்களை பாடி ரசிகர்களை மெய்மறக்க செய்யும் ஆண்ட்ரியாவின் வாழ்க்கையில் உணர்வுபூர்வமான சில வலிகளை கடந்து வந்துள்ளார். ஆம், சமீபத்தில் பெங்களூரில் நடந்த கவிதை போட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா சோகமான சில கவிதைகளை வாசித்தார். ஏன் உங்கள் கவிதையில் இவ்வளவு சோகம் என கேட்டதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, திருமணம் ஆன நபர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த இருண்டகால துயரத்தை தன்னால் அடக்க முடியவில்லை என கூறினார்.
 
சமீபத்தில் கூட, தான் மிகுந்த மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாவும்,அதனால் தான் சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :