1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (11:16 IST)

ஆபாசக் கேள்வி கேட்ட ரசிகர் –நெத்தியடி பதில் கொடுத்து ஆஃப் செய்த நடிகை!

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராகவிம் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் இருக்கும் ஆன்ச்சால் அகர்வாலிடம் ரசிகர் கேட்ட கேள்வி முகம் சுளிக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

பிரபலமாக இருக்கும் பிரபலங்கள் ரசிகர்களோடு தொடர்பில் இருப்பதற்காக சமூகவலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதுவே சிலநேரம் அவர்களுக்கு தொல்லையாகவும் இருக்கிறது. அந்த வகையில் ஸ்டாண்ட் காமெடி செய்து பிரபலமான ஆன்ச்சால் அகர்வால் ரசிகர்கள் தன்னிடம் கேட்கும் ஆபாசமான மற்றும் முட்டாள்தனமானக் கேள்விகளுக்கு பதிலளித்து அதை ஸ்க்ரீன் ஷாட்டாக பகிர்ந்து வருகின்றார்.

சமீபத்தில் அவரிடம் ஒரு ரசிகர் நீங்கள் சுய இன்பம் செய்வீர்களா எனக் கேட்க அவருக்கு ‘உங்களைப் போன்ற ஆண்கள் இருக்கும் வரை பெண்கள் அதைதான் தேர்ந்தெடுப்பார்கள்’ எனக் கூறியுள்ளார். மேலும் அந்த உரையாடலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார்.