ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 26 டிசம்பர் 2020 (20:33 IST)

''பிக் பாஸ்'' செல்லும் பிரபல முன்னணி நடிகர்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஜெயம் ரவி பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் பூமி. இப்படத்தின் ஃபர்ஸ்லுக், மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இன்று இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் இதை டிரெண்டு செய்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையி ஜெயம் ரவியின் பூமி படம் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் ஜெயன் ரவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து பல சினிமா புரோமோஷன் நடைபெற்று வருகிறது.