1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (13:43 IST)

7 ஜி ரெயின்போ காலணி இரண்டாம் பாகத்தில் ஹீரோயின் இவர்தானா?

2004 ஆம் 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது மலையாள நடிகையான அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் திரிஷா நடித்த ராங்கி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.