வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (08:04 IST)

அரசியல் படத்தில் இணைந்து நடிக்கும் செல்வராகவன் & யோகி பாபு!

இயக்குனராக தன்னை நிரூபித்த செல்வராகவன் சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார். அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், சாணிக் காயிதம் மற்றும் ஃபர்ஹானா ஆகிய திரைப்படங்கள் நல்ல கவனத்தைப் பெற்றன.

இதையடுத்து இப்போது இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது அரசியல் கதையொன்றில் அவர் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை புதுமுக இயக்குனர் ரெங்கநாதன் இயக்குகிறார்.

மற்ற கதபாத்திரங்களில் நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார்.