ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (08:40 IST)

அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?... சூப்பர் டீலக்ஸை விமர்சிக்கும் நடிகர்

அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா என தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தை விமர்சித்திருக்கிறார் நடிகர் `நட்டி’ நட்ராஜ்.
ஆரண்ய காண்டம் படத்துக்குப் பின்னர் 8 ஆண்டுகள் இடைவெளியில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்திரி, மிஷ்கின் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படம் வெளியாகி விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் நல்ல பெயரைச் சம்பாதித்திருக்கிறது. அதேநேரம் ஒரு தரப்பினர் படம் குறித்து விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள். 
அந்தவகையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ,சூப்பர் டீலக்ஸ் படத்தைக் கடுமையான விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நட்ராஜ், `அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?... விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்....’ என்று ஒரு பதிவிலும், `Super deluxe.... தாங்க முடியலடா சாமி....ஏன்டா என்ன பிரச்சனை ...’ என்று மற்றொரு பதிவிலும் நட்டி நட்ராஜ் விமர்சித்திருக்கிறார்.