கமல் படத்தில் அறிமுகமான நடிகை… பிக்பாஸில் வீட்டுக்குள் செல்ல இருக்கிறாரா?

Last Modified புதன், 16 செப்டம்பர் 2020 (17:39 IST)

கமலின் ஹேராம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பாடகி வசுந்தரா தாஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ஹேராம். அந்த படத்தில் கமலின் மனைவியாக நடித்தவர் பாடகி வசுந்தரா தாஸ். அதன் பின் சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இவர் ஒரு பாடகியும் கூட. ஆனால் சிட்டிசன் படத்துக்குப் பிறகு அவர் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் பாடகியாக மட்டும் வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அவரும் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர் இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் செல்ல உள்ளார் வசுந்தரா தாஸ்.இதில் மேலும் படிக்கவும் :