1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (09:15 IST)

வலிமை படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தது யார் தெரியுமா? ஞாபகம் இருக்கா அம்மன் தாயீ நடிகையை!

வலிமை படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர் 90 களில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான அம்மன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமாம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 24 ஆம் தேதி அஜித்தின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. படம் வெளியாகி வசூலில் நல்ல வேட்டை நடத்தியது. கதையில் ஆக்‌ஷனுக்கு நிகராக செண்ட்டிமெண்ட் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதில் அஜித்தின் அம்மா, தம்பி, அண்ணன், தங்கை எனப் பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் அஜித்தின் தங்கையாக நடித்துள்ள சுனாயனா பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 1995 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் அம்மன். தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஹிட்டானது. இந்த படத்தில் அம்மன் தாயீ என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த சுனாயனா ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். ஆனால் அதன் பின்னர் அவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலிமை படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ளார்.