ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2022 (12:16 IST)

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குமா பனங்கிழங்கு...?

பனங்கிழங்கு உடன் தேங்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பப்பை வலுப்பெறும். மற்றும் உடல் உறுப்புகள் நலம் பெறும். கிழங்கில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.


உடலுக்கு குளிர்ச்சி தன்மை மற்றும் உடலின் வலிமையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும் இந்த பனங்கிழங்கு பெரிதும் உதவுகிறது.

பலவீனமான கர்ப்பப்பை உள்ள பெண்கள் இந்த பனங்கிழங்கை பவுடர் செய்து தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிடுவதினால் கருப்பை வலுப்பெறும். இதற்கு என்ன காரணம் என்றால் பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்து உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்து கொள்ளும்.

பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து இரத்த சோகை நோயை எளிதில் குணப்படுத்துகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுங்கள் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பனங்கிழங்கில் உள்ள சில வகையான வேதிப்பொருட்கள் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளும். எனவே இந்த பனங்கிழங்கை எந்தவித பயம் இல்லாமல் சாப்பிடலாம்.