வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 மார்ச் 2023 (14:03 IST)

படப்பிடிப்பில் விபத்து; அமிதாப் பச்சனுக்கு எலும்பு முறிவு!

ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் சண்டைக்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் அமிதாப் பச்சனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ப்ராஜெக்ட் கே. இந்த படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்கிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்துள்ளது.

அதில் அமிதாப் பச்சன் நடித்து வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த அமிதாப் பச்சன் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வலது விலா எலும்பில் முறிவும், தசை நார்கள் கிழிந்துள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன் படப்பிடிப்பில் நடந்த விபத்து பற்றி குறிப்பிட்டுள்ளதோடு, தான் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவேன் என்றும், வலிக்கு சில மருந்துகளை பயன்படுத்துவதாகவும், எனினும் நலமாகவே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K