1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:34 IST)

விஷால், சசிகுமாரை தூக்கி சாப்பிட்ட அமீர்கான்...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழில் பல புதிய படங்கள் வெளியாகின.


 

 
அதில் விஷால் நடித்த கத்திச் சண்டை மற்றும் சசிகுமார் நடித்த ‘ பலே வெள்ளையத் தேவா’ ஆகிய படங்கள் முக்கிய படங்களாகும். இந்த 2 படங்களும் பாக்ஸ் ஆபீசில் ஹிட் அடிக்கும் என தியேட்டர் அதிபர்கள் நம்பியிருந்தனர்.
 
ஆனால், நடந்ததோ வேறு.. அவர்களின் படங்களோடு பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவான  ‘தங்கல்’ திரைப்படமும் வெளியானது.  மல்யுத்த போட்டியில் வெற்றி பெற முடியாத ஒருவன், தன்னுடைய பெண் குழந்தைகளை எப்படி மல்யுத்த வீராங்கனையாக மாற்றுகிறார் என்பதுதான் அப்படத்தின் கதை. 
 
இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்தப் படம் பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த படத்தின் வசூலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் விஷால் மற்றும் சசிகுமாரின் படங்கள் திணறி வருகின்றன.
 
‘தங்கல்’ படம் வெளியான 3 நாளில் ரூ.100 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. முக்கியமாக, கிறிஸ்துமஸ் பண்டிகையான நேற்று மட்டும் ரூ.40 கோடிக்கும்  மேல் வசூலாகியுள்ளது.
 
எனவே, சென்னையில் உள்ள தியேட்டர் அதிபர்கள் கத்திச்சண்டை, பலே வெள்ளையத் தேவா’ ஆகிய படங்களை தூக்கிவிட்டு தங்கல் படத்தை திரையிட்டு வருகின்றனர். இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.