இளைஞர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியில் சப்ஸ்க்ரிப்ஷன் அளிக்கும் அமேசான் ப்ரைம்!
18 வயது முதல் 24 வயதுள்ளவர்களுக்கு அமேசான் ப்ரைம் தங்கள் சந்தாவில் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.
ஓடிடி தளங்களில் உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் ஒன்று அமேசான் ப்ரைம் வீடியோ. இந்தியாவில் நெட்பிளிக்ஸை விட அதிக வாடிக்கையாளர்களோடு முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அதன் ஆண்டு சந்தா குறைவாக இருப்பதும் ஒரு காரணம். இதுவரை ஆண்டுக்கு 999 ரூபாய் வசூலித்த அமேசான், டிசம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு 1499 ரூபாயாக உயர்த்த உள்ளதாம்.
இதனால் புதிய வாடிக்கையாளர்கள் இணைவது குறையாத வகையில் பார்த்துக்கொள்ள புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி 18 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் 50 சதவீத தள்ளுபடி விலையில் சப்ஸ்கிரிப்ஷன் செய்துகொள்ளலாம். அதே போல தனது நண்பர்களுக்கும் இந்த திட்டத்தை பரிந்துரை செய்யலாம்.