புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (10:06 IST)

இசையமைப்பாளராகும் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்தவர் வித்யாசாகர்.

தெலுங்கில் இருந்து 1990 களில் தமிழுக்கு வந்த இசையமைப்பாளர் வித்யாசாகர் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருந்தார். ரஜினியின் சந்திரமுகி, கமலின் அன்பே சிவம் மற்றும் விஜய் அஜித்தின் ஏராளமான படங்களுக்கு இசையமைத்த அவர் இயக்குனர் தரணி படங்களின் மூலம் தனிக்கவனம் பெற்றார். 2000களுக்கு பிறகு ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.இப்போது மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவரின் மகன் ஹர்ஷவர்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் அவர் கீபோர்டு பிளேயராக பணியாற்றியுள்ளார். சிபிராஜ் நடிப்பில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.