புதன், 5 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (11:48 IST)

அமேசானின் ஆந்தாலஜி திரைப்படம்: ஐந்து இயக்குனர்களின் டைட்டில்கள் அறிவிப்பு!

அமேசானின் ஆந்தாலஜி திரைப்படம்
அமேசான் நிறுவனத்தின் முதல் ஆந்தாலஜி தமிழ் திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது என்பது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ‘புத்தம் புது காலை’ என்ற டைட்டிலுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஐந்து இயக்குனர்கள் இயக்கியுள்ளனர் 
 
ஐந்து வெவ்வேறு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வரும் 16ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. ஐந்து பாகங்களையும் சுகாசினி மணிரத்தினம், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், கௌதம் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் தனித்தனியாக இயக்கியுள்ளனர்.
 
இந்த ஐந்து பாகங்களின் தனித்தனிடைட்டில் மற்றும் நடித்தவர்கள் யார் என்பதை தற்போது பார்ப்போம்
 
1. சுதா கொங்கராவின் பட டைட்டில்: ’இளமை இதோ இதோ’: நடித்தவர்கள்: காளிதாஸ் ஜெயராம், கல்யாணி பிரியதர்சன்
 
2. சுஹாசினி மணிரத்னம் பட டைட்டில்: ’காஃபி எனிஒன்’: நடித்தவர்கள்: ஸ்ருதிஹாசன், அனுஹாசன்
 
3. ராஜீவ் மேனன் பட டைட்டில்: ’ரீயூனியன்’ நடித்தவர்கள்: ஆண்ட்ரியா, லீலா சாம்சன்
 
4. கவுதம் மேனன் பட டைட்டில்: ’அவரும் நானும் - அவளும் நானும்’ நடித்தவர்கள்: எம்.எஸ்.பாஸ்கர், ரிதுவர்மா
 
5. கார்த்திக் சுப்புராஜ் பட டைட்டில்: ’மிராக்கிள்’ நடித்தவர்கள்: பாபிசிம்ஹா, முத்துகுமார்