1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (09:35 IST)

பிரச்சனை என் ஆடையில் இல்லை… உங்கள் கேமராவில்தான் – அமலா பால் ஆவேசம்!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார்.

அதன் பின்னர் கடந்த ஆண்டு அமலா பால் தன்னுடைய பிறந்தநாளில் அவரின் புதுக்காதலரை அறிமுகம் செய்தார். ஜெகத் தேசாய் என்பவருடன் அமலா பால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இந்த காதலை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பின்னர் நவம்பர் மாதத்தில் ஜெகத் தேசாயைக் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறக்க, அந்த குழந்தைக்கு ‘இலை’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் லெவல் க்ராஸ் என்ற பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அமலா பால், மினி ஸ்கர்ட் ஆடையணிந்து கல்லூரி ஒன்றுக்கு சென்று மாணவர்களோடு நடனம் ஆடினார். இது சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் கல்லூரிக்கு வரும்போது இதுபோன்ற ஆடைகளை அணிந்து வரலாமா என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு பதிலளித்த அமலா பால் “எனக்கு வசதியான ஆடையைதான் நான் அணிய முடியும். என் ஆடையில் மாணவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் ஆடையில் எந்த கவர்ச்சியும் இல்லை, ஆனால் உங்கள் கேமராக்கள் அதை கவர்ச்சியாக்கிக் காட்டின. பாரம்பரிய உடைகள் மற்றும் மேற்கத்திய உடைகள் என அனைத்து வகையான ஆடைகளையும் நான் அணிவேன்” என பதிலளித்துள்ளார்.