1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 6 ஜனவரி 2020 (11:49 IST)

பாரம்பரிய முறைப்படி ஆல்யா மானசாவிற்கு சீமந்தம் - வைரலாகும் வளைகாப்பு வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். 
 
இதையடுத்து  சில மாதங்களுக்கு முன் ஆல்யா மானசா கர்பமாக இருப்பதாக சஞ்சீவ் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது முறைப்படி ஆல்யாவிற்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் உலா வர அனைவரும் இந்த காதல் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Papu ku Baby shower