திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (10:57 IST)

'ஆலுமா டோலுமா 2' இதோ,,, வந்துகிட்டே இருக்கு!

'அஜித்தின்' விஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் டிராக்குக்காக தல ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.



இந்த படம் 2019 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்கள், விஸ்வாசம் படத்துக்க இசைமைப்பாளர் இமான் இசையமைப்பது எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும், அவர் விஸ்வாசம் படத்துககு இசைமைக்க 2018ம் ஆண்டு ஆரம்பத்தில் துவங்கினார். ஆண்டு இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் விஸ்வாசம் படத்துக்கான ‘ பாடல்கள் அனைத்தையும் உருவாக்கிவிட்டார் இமான். 
 
இந்த படத்தில் 3 மாஸ் பாடல்கள் இருப்பதாக பாடலாசிரியர் விவேகா, அண்மையில் இணைதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இந்த விவேகா மாஸ் ஓபனிங் பாடல்கள் எழுதுவதில் எவ்வளவு பிரபலம் ஆனவர் என்பது கோலிவுட்டில் எல்லாருக்குமே தெரியும். 
 
அவர் தல ரசிகர்களுக்காக குத்து பாட்டு இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார். இப்பாடலுக்கான இசையமைப்பாளர் இமான் கடுமையாக உழைத்துள்ளதையும் விவேகா தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
மெல்லடி இசைமைப்பாளரான  இமான், அஜித் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்துள்ளார். இதனை திரையில் பார்க்கும் போது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும் என்பது உறுதி.
 
அஜித்தின் வேதாளம் படத்தில் இடம் பெற்ற “ஆலுமா டோலுமா” பாடல் தமிழ் சினிமாவில் தலைச்சிறந்த குத்து பாடல்களில் ஒன்று. மொழியே தெரியாதவர்களை கூட உடனே எழுந்து நின்று ஆட்டம் போடவைக்கும் அந்த பாட்டு.
 
 அதே மாதியான ஒரு குத்து பாட்டைத்தான் தல ரசிகர்கள் விஸ்வாசம் படத்தில் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாஸ் குத்துப்பாட்டு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.