புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:26 IST)

மகான் படத்தைப் புகழ்ந்து தள்ளிய மலையாள இயக்குனர்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் மகான்.

விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சனத் மற்றும் சிம்ரன் நடிப்பில் இன்று வெளியான மகான் திரைப்படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம்முக்கு ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது எனவும் பல ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களின் இயக்குனரும், கார்த்திக் சுப்பராஜின் நெருங்கிய நண்பருமான அல்போன்ஸ் புத்திரன் இந்த படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘மகான் ஒரு புத்திசாலித்தனமான படம். அந்நியனுக்குப் பிறகு விக்ரம்மை சிறப்பாக பயன்படுத்திய சுப்புவுக்கு நன்றி. பாபி நீங்கள் ஜிகர்தண்டாவை விட இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள். தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள துருவ் கவர்ந்துள்ளார். முத்துக்குமார் மறுபடியும் தன் திறமையை நிரூபித்துள்ளார். சனத்தும்தான். படக்குழுவினர் அனைவருக்கும் மரியாதையும் அன்பும்’ எனக் கூறியுள்ளார்.