1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:13 IST)

வலிமையில் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி வெளியான சீக்ரெட்!

வலிமை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் முதலமைச்சரால் ஸ்பெஷலாக நியமிக்கப்படும் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித் என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுவரை அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெற்றதில்லை.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஹெச் வினோத் ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பைக் ரேஸ் வீரர் ஒருவரை நேரடியாக போலிஸ் அதிகாரியாக நியமித்தார். அதுபோல நேரடியாக நியமிக்கப்படும் போலிஸ் அதிகாரியாக அஜித் நடிக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.