புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (15:17 IST)

3 மாதமாகியும் குறையாத பாராட்டு… ஜெய்பீம் பார்த்து புகழ்ந்த இயக்குனர்!

ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில் கூட இன்னமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்ததால் பரவலாக நல்ல பாராட்டையும், விமர்சனங்களையும் பெற்றது. சில சர்ச்சைகளை சந்தித்தாலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படலாம் என கருதப்பட்ட நிலையில் அது நிகழவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் சில காட்சிகள் ஆஸ்கர் யுடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதோடு படத்தின் இயக்குனர் ஞானவேலின் படத்தைப் பற்றிய கருத்தும் இடம்பெற்றுள்ளது. இந்த மரியாதையைப் பெறும் முதல் இந்தியப் படம் ஜெய் பீம்தான்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தைப் பார்த்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவரின் சமூகவலைதளப் பக்கத்தில் ‘ஜெய்பீம் படம் பார்த்தேன். நெஞ்சை தொடும் படம். இந்த படத்தை தயாரித்த சூர்யா மற்றும் ஜோதிகாவை நினைத்து பெருமை கொள்கிறேன். ’ என பாராட்டியுள்ளார்.