புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:16 IST)

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் மோகன்லாலின் படம்!

மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மரைக்காயர். இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் டிசம்பர் 2 ஆம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆனது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களை ஏமாற்றியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள 276 படங்களில் மரைக்காயர் படமும் இடம்பிடித்துள்ளது. இந்த பிரிவில் மற்றொரு படமாக ஜெய் பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆஸ்கருக்கான இறுதிப் பட்டியல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.