உதவி செய்வது போல் நடித்து பாலியல் தொல்லை: பிரபல நடிகை பகீர் புகார்!!!

actress
Last Modified திங்கள், 11 மார்ச் 2019 (11:41 IST)
உதவி செய்கிறேன் என கூறிக்கொண்டு நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.
 
தமிழில் பல படங்களில் நடித்து பேமசானவர் தான் நடிகை விஜயலட்சுமி. பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்துள்ளார். அதுபோக கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
complaint
இந்நிலையில் விஜயலட்சுமிக்கு கன்னட நடிகர் ரவி பிரகாஷ் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது, எனக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவி செய்தார். பின்னர் அதை சாக்காக வைத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என விஜயலட்சுமி போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதை ரவி பிரகாஷ் முற்றிலுமாக மறுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :