திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 11 ஏப்ரல் 2020 (10:24 IST)

லாக்டவுன்: ஆபாச வீடியோக்கள் அதிகம் பார்க்கும் நாடுகளில் முதல் இடத்தை பிடித்த இந்தியா!

கொரோனா வைரஸ் பரவுததால் உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் வீட்டில் முடங்கியுள்ளது. ஆனாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை எண்ணி பல்வேறு நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருந்து வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில் இன்னும் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வீட்டில் இருப்பதால் பொழுது போக்கிற்காக தங்களுக்கு பிடித்த விருப்பமான காரியங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய இளைஞர்கள் இந்த கொரோனா ஊரடங்கில் ஆபாச வீடியோக்களை பார்ப்பதில் புதிய சாதனையை எட்டியுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் உலக நாடுகளிலேயே அதிகம் ஆபாச படம் பார்ப்பவர்களின் இந்தியர்கள் முந்தியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளனர். இந்த செய்தியை உலக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க... ஆமா, வெளியவும் போகக்கூடாது, கால காலத்துல கல்யாணமும் பண்ணி வைக்கிறது கிடையாது... அப்பறோம் நாங்க என்னதான் பண்ணுறது..? என்று கேள்வி கேட்டு தங்களது சாதனையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.