வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (18:49 IST)

ராஜ மௌலிக்கு டேக்கா குடுத்த ஹீரோயின்:காரணம் என்ன??

பிரபல திரைப்பட இயக்குனர் ராஜமௌலி இயக்கவிருக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாய் நடிக்க அலியா பட் மறுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு, தமிழ், ஆகிய மொழிகளில் முன்னணி இயக்குனராகத் திகழ்பவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரது முந்தைய திரைப்படமான பாகுபலி, இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி,ஆர். ஆகியோர் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ’ஆர் ஆர் ஆர்’. இத்திரைப்படம் சரித்திர படம் என்பதால் மிகவும் நுணுக்கமாக உருவாக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தின் கதாநாயகிக்காக பல நடிகர்களை அணுகினார் ராஜமௌலி. இறுதியில் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் தற்போது அலியா பட், ராஜ மௌலி இயக்கும் திரைப்படத்தில் நடிக்க மறுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு என்ன காரணம் என்று அலியா பட்டிடம் கேட்டபோது, தனக்கு குடல் தொற்று நோய் ஏற்பட்டிருப்பதாகவும், ஆதலால் தற்போது மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த செய்தி ஆர் ஆர் ஆர் திரைப்பட குழுவிற்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது. மேலும் இயக்குனர் ராஜ மௌலி, தான் இயக்கவிருக்கும் திரைப்படத்திற்கு தற்போது வேறு நடிகையை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.