விஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் ! - பிரபல நடிகை கோரிக்கை

vijay sehtupathi
Last Modified திங்கள், 24 ஜூன் 2019 (13:50 IST)
விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளரும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியாக இருந்த விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படத்தின் தயாரிப்பளர், பிரமாண்டமன பாகுபலி படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு தர வேண்டிய பணத்தை செலுத்தாததால் இப்படம் வெளியிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
 
பின்னர்., இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வரும் ஜூன் 28 ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டது.ஆனால் குறைவான தியேட்டர்களே கிடைக்கும் நிலை உருவானதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் யோகி பாபுவின் தர்மபிரபு, வெற்றியின் ஜீவி, லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதியின் படத்தால் சற்று பீதி அடைந்துள்ளனர்.
laskmi

எனவே தற்போது  இயக்குநர் லட்சுமி ராமகிருஷணன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், பெரிய படங்களின்  நிச்சயமற்ற தன்மைகள், சிறிய படங்களை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக இருந்து சிறிய படங்களைக் காப்பாற்ற வேண்டும். மேலும் ஏற்கனவே திட்டமிட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவுமென்று தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :