வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (16:28 IST)

அக்‌ஷய் குமாரை வறுத்தெடுக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ராட்சசன் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார் அக்‌ஷய் குமார்.

ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் "ராட்சசன்". சைக்கோ திரில்லர் படமாக தயாராகி இருந்த இந்த படம் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது. தமிழில் சூப்பர் ஹிட் அடித்த இப்படம் தெலுங்கில் ரிமேக் செய்யப்பட்டு வருகிறது. அக்கட சினிமாவில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார். அதே போல் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்தில் நடிகர் அக்ஷரகுமார் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த படத்தில் அக்‌ஷய்குமார் நடிக்க தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழில் ஹிட்டான காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறேன் என்று கந்தரகோலம் ஆக்கினார் என்பதால் அவரை கேலி செய்யும் விதமாக மீம்ஸ்களும் பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றன.