செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (12:14 IST)

காஞ்சனாவை தொடர்ந்து இந்தியில் "ராட்சசன்" ஆகும் அக்ஷய்குமார்!

ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் "ராட்சசன்". சைக்கோ திரில்லர் படமாக தயாராகி இருந்த இந்த படம் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது. 

தமிழில் ஹாட்ரிக் ஹிட் அடித்த இப்படம் தெலுங்கில் ரிமேக் செய்யப்பட்டு வருகிறது. அக்கட சினிமாவில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார். அதே போல் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்தில் நடிகர் அக்ஷரகுமார் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்ஷய்குமார் இதற்கு முன்னர் காஞ்சனா படத்தில் லாரன்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான லட்சுமி பாம் திரைப்படம் இந்தியில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.