சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் அக்ஷய் குமார்… கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான அறிவிப்பு!
பாலிவுட்டில் கான் நடிகர்களுக்கு பிறகு அதிக வியாபார மதிப்புக் கொண்ட நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து ஒரு ஆண்டில் குறைந்தது நான்கு படங்களாவது ரிலீஸ் செய்துவிடுவார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர் நடித்த பிருத்விராஜ், பெல் பாட்டம் உள்ளிட்ட சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்து மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை நடிகரும் இயக்குனருமான மகேஷ் மஞ்சரேக்கர் இயக்குகிறார்.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு வேதாத் மராத்தே வீர் டவுட்லே சாத் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர் மன்னர் பிருத்விராஜாக நடித்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது.