வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (16:17 IST)

நடிகர் லாரன்ஸுக்கு 1.5 கோடி ரூபாய் கொடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் !

நடிகர் லாரன்ஸின் அறக்கட்டளைக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமார் 1.5 கோடி ரூபாய் நிதியாகக் கொடுத்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் வித்தகராக இருந்தாலும், அவர் செய்து வரும் சமூக சேவைகளுக்காக பொதுவெளியில் பாராட்டப்பட்டு வருகிறார். இப்போது அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் லஷ்மி பாம் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் திருநங்கையாக நடித்து வருகிறார் அக்‌ஷய் குமார். இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு ரூ.1.5 கோடியை அளித்துள்ளார். இந்த தொகை திருநங்கைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது. வீடுகள் கட்டுவதற்கான நிலத்தை நடிகர் லாரன்ஸ் வழங்கியுள்ளார். விரைவில் இதற்கான பூமி பூஜை நடக்கும் எனத் தெரிகிறது.