செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 மார்ச் 2018 (19:16 IST)

சமந்தாவின் அடுத்த படத்திற்கு 'UA' சான்றிதழ்

நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னரும் தமிழில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள தெலுங்கு ப்டம் 'ரங்கஸ்தாலம்'. ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா அச்சு அசலாக கிராமத்து பெண் போல் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள்' 'UA' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 175 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்சரண், சமந்தா, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, கவுதமி, பூஜா ஹெக்டே உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை சுகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.