1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2023 (13:33 IST)

உலக அழகியா இருந்தாலும் கொஞ்ச தள்ளியே இருக்கட்டும் - விக்னேஷ் சிவனுக்கு கண்டீஷன் போட்ட அஜித்!

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான துணிவு படம் வசூலில் வேட்டையாடி சுமார் ரூ. 150 கோடி தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை அடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க விருக்கிறார். 
 
இப்படத்தில் ஹீரோயினாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். பொதுவாக அஜித்தின் படத்தில் ஹீரோவோடு நெருக்கம் அதிகம் காட்டாமல் அவர்ளுக்கு முக்கியத்துவம் கொடுக்கட்டிருக்கும். 
 
இந்நிலையில் உலக அழகி என்பதால் கொஞ்சம் ரொமான்ஸ் காட்சிகள் வைக்கலாம் என விக்னேஷ் கதை எழுத அப்படியெல்லாம் வேண்டவே வேண்டாம் உலக அழகியாக இருந்தாலும் அவர்களுக்கும் முக்கிய ரோல் வையுங்கள் என கூறினாராம். இதனால் விக்னேஷ் சிவன் கதையில் சில மாற்றங்கள் செய்து வருகிறாராம்.