அஜித்தின் #VidaaMuyarchi பட அப்டேட் விரைவில் - இயக்குனர் மகிழ்திருமேனி டுவீட்
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகவுள்ள படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தமன்னா, த்ரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னை, புனே, அபுதாபி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
நடிகர் விஜய் சுற்றுப்பயணம் செய்துள்ள நார்வே நாட்டிற்குத்தான் அஜித்தும் உலக பைக் சுற்றுப்பயணம் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
இப்பட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்று இயக்குனர் மகிழ்திருமேனி கூறியிருந்தார்.
அதன்படி, விரைவில் விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என மகிழ்திருமேனி இன்று தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நடிகர் அஜித்துடன் அவர் உரையாடுவது போன்ற புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.