1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (11:01 IST)

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' மே 1ல் ரிலீஸ் இல்லை!

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' மே 1ம் தேதி ரிலீஸ் ஆகாது என தெரியவந்துள்ளது.


 
விஸ்வாசம் படத்துக்கு பின் அஜித் நடித்து வரும் படம் நேர்கொண்ட பார்வை. அமிதாப் நடித்த பிங்க் படத்தின் ரிமேக் தான் இந்த படம். வழக்கறிஞர் வேடத்தில் அஜித் நடித்துள்ளார்.
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. அங்கு நீதிமன்ற செட் அமைத்து வாதாடும் காட்சிகள் படப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
 
நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன், ஷிரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
 
ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். வரும் மே 1ம் தேதி நேர்கொண்ட பார்வை படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் அப்போது படம் வெளியாக வாய்ப்பு இல்லையாம். ஜுன் அல்லது ஜுலையில் தான் படம் வெளியாகும் என்கிறார்கள். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் மற்றும் பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட பணிகளை உடனடியாக முடிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக படம் ஜுன், ஜுலைக்கு தள்ளிப்போயிள்ளதாம்.