1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (18:50 IST)

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

சமீபத்தில் வெளியான அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அவர் பேக்கை கையில் எடுத்துக் கொண்டு சாலையில் நடந்து செல்வது போன்ற காட்சி இருந்தது என்பதும் இந்த போஸ்டர் இணையத்தில் மீம்ஸ்களால் கேலி செய்யப்பட்டது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனாவும் கையில் பெட்டியை எடுத்துக்கொண்டு செல்வது போன்ற போஸ்டர் குபேரா படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
குபேரா படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் வீடியோ ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என்று இந்த போஸ்டரின் மூலம் ரசிகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது, 
 
Edited by Siva