திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (16:05 IST)

அஜித் விக்னேஷ் சிவன் படம் தொடங்குவதில் தாமதம்… காரணம் இதுதானா?

துணிவு படத்தின் ரிலீஸ் ஆட உடனேயே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அஜித் 62 ஆவது படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் துணிவு ரிலீஸுக்குப் பின் ஜனவரி 17 ஆம் தேதி இந்த படத்தை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தில் அஜித்தை தவிர மற்ற நடிகர் நடிகைகள் பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது நடிகர் நடிகைகள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் தொடக்கம் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.