விலையை சொல்லி விநியோகஸ்தர்களை அலறவிடும் கங்குவா தயாரிப்பாளர்!
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும் கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் பிஸ்னஸை தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.
இந்நிலையில் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமை 75 கோடி ருபாய் என சொல்லி தயாரிப்பு தரப்பு விநியோகஸ்தர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறதாம். இது விஜய், அஜித், ரஜினி படங்களின் வியாபாரத்துக்கு நிகரானது என சொல்லப்படுகிறது. ஆனால் சூர்யாவுக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லாததால் விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்களாம்.