வியாழன், 12 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (15:40 IST)

இன்று விடாமுயற்சி அப்டேட்.. உறுதி செய்த சுரேஷ் சந்திராவின் பதிவு..!

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தது. இந்த நிலையில் சற்றுமுன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் விடாமுயற்சி அப்டேட் இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித், த்ரிஷா நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் அப்டேட் வந்து வெகு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று மாலை இந்த படத்தின் அப்டேட் வரும் என்று கூறப்பட்டது. அந்த வகையில் சற்றுமுன் 5.05 மணிக்கு விடாமுயற்சி அப்டேட் வரும் என்று சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளதால் அநேகமாக ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Edited by Siva