புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 5 மார்ச் 2020 (12:52 IST)

மங்காத்தா ஸ்டைலில் மீண்டும் ஒரு பைக் ஸ்டண்ட்... வலிமை ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை'படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும் போலீஸ் அதிகாரியாகவே நடித்துவருகிறார். இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித் பைக் ரேஸராக மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் நிறைந்து வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது மங்காத்தா படத்தில் இடம்பெற்ற மாஸான பைக் ஸ்டண்ட் காட்சி போன்றே வலிமை படத்திலும் அனல் பறக்கும் பைக் சேஸிங் காட்சிகள் இடம்பற்றுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் வலிமை பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனவே இப்படம் அஜித் ரசிகர்களுக்கு சிறப்பான தரமான... சம்பவமாக இருக்கும்.