ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (07:52 IST)

செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பம்… கார் ரேஸ் பயிற்சிகளைத் தொடங்கிய அஜித்!- வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பின்னர் அவர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில்தான் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள போவதாக உறுதி செய்யப்பட்ட தகவல்லள் வெளியாகி வருகின்றன.  அவரின் சக நடிகர்கள் மற்றும் கார் ரேஸர் நரேன் கார்த்திகேயன் போன்றோர் இதற்காக அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது துபாயில் அஜித் ரேஸுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். அது சம்மந்தமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.