புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (22:18 IST)

அஜித்தின் 'பிங்க்' ரீமேக் படத்தின் டைட்டில் அறிவிப்பு

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் தமிழகத்தில் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முதல் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் டுவிட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'பிங்க்' ரீமேக் படத்தின் டைட்டில் 'நேர் கொண்ட பார்வை' என்பதாகும்

இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அஜித் வக்கீல் கேரக்டரில் அட்டகாசமாக காட்சி தருகிறார். அவருடன் இந்த படத்தின் மூன்று பெண் கேரக்டர்களும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் உள்ளனர்.

இந்த ஃபர்ஸ்ட்லுக் வெளியான அடுத்த நிமிடம் முதல் தற்போது வரை #NERKONDAPAARVAI, #AK59, #Thala59 மற்றும் #நேர்கொண்டபார்வை ஆகிய நான்கு ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது