வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (17:14 IST)

அசல் படத்துக்கு பிறகு திரைக்கதையில் கவனம் செலுத்தும் அஜித்!

நடிகர் அஜித் தன்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி முழு திரைக்கதையையும் படித்து முடித்துள்ளாராம்.

நடிகர்களில் அஜித் கொஞ்சம் வித்தியாசமானவர். அவரின் போட்டியாளரான விஜய் வருடத்துக்கு இரண்டு படங்கள் அல்லது குறைந்தது ஒரு படமாவது ரிலீஸ் செய்துவிடும் நிலையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் என நடிப்பவர். மேலும் ஒரே இயக்குனர் அல்லது தயாரிப்பாளரோடு மூன்று படங்கள் தொடர்ச்சியாக பணிபுரிவார். அதுபோல கதை மற்றும் திரைக்கதை போன்ற விஷயங்களிலும் அதீதமான அக்கறை காட்டமாட்டார். இயக்குனர்களிடம் கதை கேட்டுவிட்டால் நேரடியாக படப்பிடிப்பு தளத்துக்கு சென்று காட்சிகளை படித்து நடிப்பதோடு சரி.

அப்படிதான் கடந்த 10 வருடத்துக்கும் மேல் நடித்து வருகிறார். கடைசியாக அசல் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய விஷயங்களில் அவர் பங்காற்றி இருந்தார். அந்த படம் படுதோல்வி அடைந்தது. அதனால் அதற்கு பின்னர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அஜித் இப்போது அஜித் 61 படத்தின் முழு திரைக்கதையும் வேண்டும் என இயக்குனர் ஹெச் வினோத்திடம் கேட்டு அதைப் படித்த பின்னரே சம்மதம் தெரிவித்துள்ளாராம். அஜித்திடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அவரை சுற்றி இருப்பவர்களுக்கே ஆச்சர்யம் கொடுத்துள்ளதாம்.