வியாழன், 6 அக்டோபர் 2022
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified வியாழன், 22 செப்டம்பர் 2022 (17:12 IST)

''துணிவு .....வெல்வோம்-''-- அஜித் பட நடிகர் டுவீட்...ரசிகர்கள் குஷி!

போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் அஜித்-61. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அஜித்61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு  ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், இன்று   ‘துணிவு’ படத்தின் இரண்டாவதுலுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அஜித் அட்டகாசமாக இருக்கும் காட்சி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் அஜித்துடன் இணைந்து  நடித்துள்ள  நடிகர் சமுத்திரகனி, தன் டுவிட்டர் பக்கத்தில், துணிவு வெல்வோம் எனப் பதிவிட்டுள்ளார்...