செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (18:19 IST)

நடிகர் விஜய்யை முந்திய அஜித்குமார் ! எதில் தெரியுமா?

ajithkumar
இந்த ஆண்டில் வெளியான படங்களில் ரிலிஸான முதல் நாள்  ஓபனிங்கில் வசூல் சாதனை படைத்த படங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், பீஸ்ட் பட வசூலை முந்தி அஜித்தின் வலிமை முதலிடம் பிடித்துள்ளது.


இந்த ஆண்டில் வெளியான படங்களில் ரிலிஸான முதல் நாள்  ஓபனிங்கில் வசூல் சாதனை படைத்த படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், நடிகர் அஜித்குமாரின் வலிமை 36.17 கோடி ரூபாயும், விஜய்யின் பீஸ்ட் படம் 26.40 கோடி ரூபாயும், கமலின் விக்ரம் 20.61 கோடி ரூபாயும், ஆர் ஆர் ஆர் படம் 12.73 கோடி ரூபாயும், திருச்சிற்றம்பலம் படம் 9.52 கோடி ரூபாயும், டான் 9.47 கோடி ரூபாயும், கோப்ரா 9.28 கோடி ரூபாயும், கேஜிஎஃப்-2 8.24 கோடி ரூபாயும், விருமன் 7.21 கோடி ரூபாயும், வெந்துதணிந்தது காடு 6.85 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலீஸான முதல் நாள் ஓபனிங்கில், அதிக வசூலீட்டிய படங்களில், வலிமை படம் முதலிடத்தையும், பீஸ்ட் படம் இரண்டாம் இடத்தையும் விக்ரம் படம் 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.